கொரோனா பரவலால் பண்ணைக்கு மாற்றப்பட்ட பேருந்து சேவைகள் சீரில்லை - பயணிகள் அசௌகரியம் - Yarl Voice கொரோனா பரவலால் பண்ணைக்கு மாற்றப்பட்ட பேருந்து சேவைகள் சீரில்லை - பயணிகள் அசௌகரியம் - Yarl Voice

கொரோனா பரவலால் பண்ணைக்கு மாற்றப்பட்ட பேருந்து சேவைகள் சீரில்லை - பயணிகள் அசௌகரியம்
கொவிட் இடரை கட்டுப்படுத்தும் நோக்கோடு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் பண்ணை பகுதிக்கு மாற்றப்பட்டதால், பருத்தித்துறை சாலை பேருந்து சேவை சீராக இடம்பெறவில்லை என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பேருந்து நிலையத்தை பண்ணைக்கு மாற்ற ஆரம்பத்தில் இ.போ.ச மறுத்த போதும் கொவிட் இடரிலிருந்து நகரை பாதுகாக்கும் நோக்கோடு சேவைகளை பண்ணையில் இருந்து முன்னெடுக்க இணங்கினர்.

ஆனாலும் பருத்தித்துறை சாலையின் பேருந்துகள் ஒழுங்கீனமான சேவையையே முன்னெடுக்கின்றது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட காப்பாளர்களை கோரும் போது, பண்ணைக்கு மாற்றப்பட்டமையால் பயணிகள் வருவதில்லை ஆகவே சேவையை முன்னெடுக்க பருத்தித்துறை சாலையினர் வருவதில்லை என கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கைகளால் பருவகாலச் சீட்டெடுத்தோர் பாதிக்கப்பட்டு, வீதியில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகின்றது.

வைத்தியசாலை போன்றவற்றுக்கு செல்பவர்கள் மாணவர்களும் பாதிக்கபடுவதோடு, பேருந்துகளின் சேவை நேரங்களில் பேருந்துகள் வருகை தராமையால், அதிகளவு பயணிகளோடு ஏனைய நேர பேருந்துகளில் செல்ல நேரிடுகின்றது.

இதனால் கொவிட் தொற்றும் அபாயமும் மேலெழுந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post