அரசகுடும்பத்தினருடன் வாழ்ந்தவேளை தற்கொலை செய்ய நினைத்தேன் - ஹரியின் மனைவி மேகன் - Yarl Voice அரசகுடும்பத்தினருடன் வாழ்ந்தவேளை தற்கொலை செய்ய நினைத்தேன் - ஹரியின் மனைவி மேகன் - Yarl Voice

அரசகுடும்பத்தினருடன் வாழ்ந்தவேளை தற்கொலை செய்ய நினைத்தேன் - ஹரியின் மனைவி மேகன்
பிரிட்டிஸ் அரசகுடும்பத்தினருடன் வாழ்ந்தவேளை தான் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக ஹரியின் மனைவி மேகன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் அரச குடும்பத்தினருடன் வாழ்வது மிகவும் கஸ்டமான விடயமாக காணப்பட்டது என தெரிவித்துள்ள மேகன் சில தருணங்களில் இனிமேலும் உயிர்வாழக்கூடாது என நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் மகனின் தோல் எவ்வளவு கறுப்பாகயிருக்கும் அரசகுடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஹரியிடம் கேள்வி எழுப்பினார் அதுவே மிகவும் வேதனையை அளித்தது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் என்ன செய்ய முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டவேளை நான் மிகவும் தனிமையை உணர்ந்தேன் ஒரு கட்டத்தில் நான் பல மாதங்களாக வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என மேர்கன் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலும் என்னால் தனிமையாக உணரமுடியாது என தோன்றியது என அவர் தெரிவித்துள்ளார்.

நீங்கள் தற்கொலை உங்களிற்கு நீங்களே காயம் ஏற்படுத்திக்கொள்வது குறித்து எப்போதாவது சிந்தித்தீர்களா என்ற கேள்விக்கு ஆம் என மேகன் தெரிவித்துள்ளார்.

ஆம் தற்கொலை குறித்த சிந்தனை மிகதெளிவானதாக அச்சமூட்டுவதாக காணப்பட்டது யாரிடம் உதவி கோருவது என  தெரியாத நிலையில் நான் இருந்தேன் என ஹரியின் மனைவி தெரிவித்துள்ளார்.


2018 இல் நாங்கள் திருமணம் செய்த பின்னரே நிலைமை மோசமடையத் தொடங்கியது நான் பாதுகாக்கப்படவில்லை என்பதை நான் உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ள அவர் அரசகுடும்பத்தை சேர்ந்த ஏனையவர்களை பாதுகாப்பதற்காக அவர்கள் பொய் சொல்ல தயாராகயிருந்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post