ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டு - Yarl Voice ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டு - Yarl Voice

ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலிலேயே முன்னணி செயற்படுகிறது - முதல்வர் மணிவண்ணன் குற்றச்சாட்டுஅரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ்.மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்....

மகிந்த ராஜபக்ச குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப யாழ் மாநகர சபையினை கலைத்து அரசிற்கு சார்பாக இந்த மாநகர சபையை பொறுப்பேற்பதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றனர்.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச  ஐனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் குறித்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என திரிந்தவர்கள், அதேபோல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் கோத்தபாய ராஜபக்சவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களை செய்தவர்கள்.

தற்போது மாநகர சபையினை கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post