மியன்மார் வெளிவிவகார அமைச்சரிற்கு விடுத்த அழைப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் - சஜித் வேண்டுகோள் - Yarl Voice மியன்மார் வெளிவிவகார அமைச்சரிற்கு விடுத்த அழைப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் - சஜித் வேண்டுகோள் - Yarl Voice

மியன்மார் வெளிவிவகார அமைச்சரிற்கு விடுத்த அழைப்பை விலக்கிக்கொள்ள வேண்டும் - சஜித் வேண்டுகோள்

 


இலங்கையில் இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரிற்கு விடுத்த வேளைகோளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன விலக்கிக்கொள்ளவேண்டும் என  எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியன்மாரின் வெளிவிவகார அமைச்சரிற்கு அழைப்பு விடுத்துள்ளமை அந்த நாட்டில் இடம்பெற்ற இராணுவசதிப்புரட்சியை இலங்கை அங்கீகரித்துள்ளது என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் இடம்பெற்ற சதிப்புரட்சி காரணமாக அந்த நாட்டின் ஜனநாயகம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர் தலைவர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளதை அரசாங்கமும் வெளிவிவகார அமைச்சும் மியன்மார் வெளிவிவகார அமைச்சரிற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னர் கருத்தில் எடுக்க தவறிவிட்டனர் என

 தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடு;ப்பதற்கு பதில் ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இலங்கை மியன்மாரில் இடம்பெறும் விடயங்களிற்கு தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கவேண்டும் என  குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post