யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை திறப்பது தொடர்பில் இந்திய தூதுவர் நேரில் ஆராய்வு - Yarl Voice யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை திறப்பது தொடர்பில் இந்திய தூதுவர் நேரில் ஆராய்வு - Yarl Voice

யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தை திறப்பது தொடர்பில் இந்திய தூதுவர் நேரில் ஆராய்வு
இந்திய நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் யாழ் கலாசார மண்டபத்தை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட இந்திய தூதுவர் பல இடங்களிற்கும் சென்று பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் ஒரு அங்கமாக இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

இன் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்  யாழ் இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்0/Post a Comment/Comments

Previous Post Next Post