செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையினால் அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையினால் அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையினால் அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு
செஞ்சிலுவைச் சங்க சம்மேளனத்தின் (IFRC) ஏற்பாட்டில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க யாழ் கிளையினால் வெள்ள அனர்த்த நிவாரணப் பொருள்கள் வலிகாமம் மேற்கு பிரதேச மக்களுக்கு இன்று (19) முற்பகல் 9.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் தி.உதயசூரியன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் ஜெகத் அபேசிங்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பொருள்களை வழங்கி வைத்தார்.

சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட  25 கிராமசேவகர் பிரிவில் உள்ள 75 குடும்பங்களுக்கு அதாவது தாய்மார்கள், குழந்தைகள், சிறுவர்களுக்குத் தேவையான பொருள்கள் உட்பட சமையலறைப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post