சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செல்ல வழிகள் இருந்தும் அந்த உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் - கஜேந்தாரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செல்ல வழிகள் இருந்தும் அந்த உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் - கஜேந்தாரகுமார் குற்றச்சாட்டு - Yarl Voice

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் செல்ல வழிகள் இருந்தும் அந்த உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்றனர் - கஜேந்தாரகுமார் குற்றச்சாட்டு



பொறுப்புக் கூறல் என்ற விடயத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்வதனூடாகவே அடைய முடியுமென பத்து வருடங்களுக்கு மேலாக நாம் கூறி வருகின்ற போதும் அதற்கான சாத்தியங்கள் இல்லை எனக் கூறி அதற்கு கூட்டமைப்பினர் தடையை ஏற்படுத்தி ஆட்சியாளர்களை தொடர்ந்தும் பாதுகாத்து வருவதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கNஐந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்லப்படாமலே சர்வதேச நீதிமன்றத்தால் மியன்மார் விசாரிக்கப்படுவது போன்று சிறிலங்காவையும் கொண்டு செல்ல வழிகள் இருப்பதாகவும் இந்த உண்மைகளை மக்களிடத்தே சுமந்திரன் ஏன் மறைக்கின்றனர் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் பேரவையின் 46.1 உத்தேச தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என்றும் அத் தீர்மாணத்தை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து கூட்டமைப்பு மக்களுக்கு பெரும் தூரோகத்தை இழைத்துள்ளதாகவும் இந்த உண்மைகளை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

யாழ். கொக்குவிலில் உள்ள த.தே.ம. முன்னணியின் தலைமை அலுவலகத்தில்  இடம்பெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்திய உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண விஐயத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ, சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தியிருந்தார். அந்த சந்திப்பிலே ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே இப்பொழுது பேசப்படுகின்ற அல்லது தயாரிக்கப்படுகின்ற இலங்கை தொடர்பான 46.1 தீரமானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது தொடர்பில் அவர் உண்மைக்கு மாறாக அப்பட்டமான பொய்களை கூறியிருக்கின்றார்.

தமிழ் மக்களை கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஐ.நா மனித உரிமை பேரவை தொடர்பாக தமிழ் மக்களுக்கு பொய்யைச் சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி பொறுப்புக் கூறல் என்ற விடயத்தை ஒரு அதிகாரமில்லாத ஐ.நா மனித உரிமை பேரவையில் எப்படி சுமந்திரனும் அவருடைய கூட்டமைப்பும் பேரவைக்குள் முடக்கி வைத்திருந்த துரோகச் செயலை தொடருகின்ற வகையில் மீண்டும் அவருடைய அந்தப் பொய்க் கருத்துக்களை மக்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்தும் கூறிக் கொண்டு வருகின்றார்.

அதிலும் அவருடைய மிக முக்கியமான கருத்தாக கூறியிருப்பது என்னவெனில் இந்த மனித உரிமை பேரவையில் உத்தேசித்த 46.1 தீர்மானத்தை மூன்று தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகமும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையினுடைய தலைவர் உறுப்பு நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு எழுதிய கடிதத்தில் இருக்கின்ற உள்ளடக்கங்கள் இந்தத் தீர்மானத்திலே உள்ளடக்கப்பட்டிருப்பதாக ஒரு அப்பட்டமான பொய்யைக் கூறியிருக்கின்றார்.

ஆகவே பொறுப்போடு நாங்கள் கூறுவது என்னவெனில் இந்தக் கடிதத்தில் மிகத் தெளிவாக பொறுப்புக் கூறலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியில் எடுக்க வேண்டுமென்று மிகத் தெளிவாக கூறியிருந்தோம். 

அவ்வாறு எடுக்கிறது மட்டுமல்ல உறுப்பு நாடுகள் அந்த பொறுப்புக் கூறல் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் செயற்பட வேண்டும் என்ற விடயத்தையும் அந்தக் கோரிக்கையையும் இந்த 46 ஆவது அமர்வில் கொண்ட வரப் போகின்ற தீர்மானத்திலும் அந்தக் கோரிக்கையை அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் போடப்பட வேண்டுமென்ற அடிப்படையில் அந்தக் கடிதத்தில் நாங்கள் எழுதியிருந்தோம்.

அந்த வகையில் ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்தும் பேரவையில் இருக்கின்ற ஒரு நிலையிலே அதில் 47 நாடுகள்  மட்டும் தான் வாக்களிக்கும் உரிமை உள்ள நாடுகளாக இருந்தாலும் கூட ஐ.நா வில் இருக்கிற அனைத்த நாடுகளும் இந்த பேரவையில் அங்கம் வகிக்கிற நிலையில் தான் அந்தக் கோரிக்கையை அனைத்த நாடுகளும் விட வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தோம்.

ஆனால் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டதற்கு மாறாக இந்தத் தீர்மானத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சர்வதேச குற்றவியல் பொறிமுறையொன்றை ஊடாக மட்டும் தான் பொறுப்புக் கூறல் இலங்கைத் தீவில் நடைபெறும் என்ற விடயம் வலிறுத்தப்படவும் இல்லை. அது சம்மந்தமாக மறைமுகமாக கூட வலியுறுத்தப்படவில்லை. மாறாக கடந்த 30.1 தீர்மானத்தில் ஒரு உள்ளகப் பொறமுறையில் நம்பிக்கை இல்லை என்ற அடிப்படையில்; அவர்கள் ஒரு சரத்தொன்றை அதிலே சேர்க்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த முறை உள்ளகப் பொறிமுறையில் இல்லை என்ற அடிப்படையில் எந்தவொரு கருத்தும் இந்தத் தீர்மானத்தில் பதியப்படாமல் மாறாக மீண்டும் அரசாங்கம் தான் இந்தப் பொறுப்பு கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்கத்திற்கு தான் அந்தப் பொறுப்பு இருக்கு என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்மானம் வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

எம்மைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உத்தேசத் தீர்மானம் என்பது ஒரு மிகப் பெரிய ஏமாற்றம் என்பது மட்டுமல்ல கடந்த 10 வருடங்களாக பொறுப்புக் கூறலை எதிர்பார்த்து பேராடிக் கொண்டிருக்கிற மக்களுக்கு முதுகில் குத்துகின்ற ஒரு தீர்மானமாகத் தான் நாங்கள் இதனைப் பார்க்கின்றோம். அதிலே எந்தவிதமான சந்தேகமோ அல்லது எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இந்தளவு நாட்களுக்குப் பிறகும் அல்லது எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் மனித உரிமை உயர்ஸ்தானிகரே பொறுப்புக் கூறல் என்ற விடயத்தை சிறிலங்கா செய்ய மறுக்கிறது அல்லது செய்ய முடியாத நிலையில் இருக்கிறது என்று சொன்னதற்குப் பிறகும் சிறிலங்காவையே பொறுப்புக் கூறச் சொல்லிக் கேட்பது உண்மையிலையே பாதிக்கப்பட்ட மக்களின் முதுகில் குத்துகிற விசயம் மட்டுமல்ல முன்னாலே குத்துகிற ஒரு செயலாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம்.

இந்தத் தீர்மானத்தை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கச் சொல்லிக் கேட்பவர்கள் அனைவரும் இந்த இனத்திற்கு துரோகம் இழைக்கிறார்கள் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகமளிக்கிறார்கள் என்பதிலும் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல் இந்த இன அழிப்பைச் செய்த இரானுவத்தையும் அரசியல் தலைவர்களையும் தொடர்ந்தும் காப்பாத்துகின்ற வகையில் எந்தவிதமான எல்லையும் இல்லாமல் அவர்களைக் காப்பாற்றி அவர்கள் தொடர்ந்தும் ஆட்சி பீடத்தில் பாதுகாப்பாக இருக்கக் கூடிய வகையில் இந்தத் தீர்மானம் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது என்பது தான் உண்மை.

இந்த உண்மையை எங்களுடைய மக்கள் என்றைக்கு எந்தளவிற்கு விளங்கிக் கொள்கிறார்களோ அந்தளவு தூரத்திற்கு நாங்கள் மாற்று வழிகளைத் தேடி இந்தத் துரோகங்களை செய்து கொண்டிருக்கக் கூடிய தமிழர்களை முற்றிலும் இந்த அரசியல் அரங்கில் இருந்து நிராகரிப்பதற்கு மக்கள் தயாராகாகாக வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டால் இந்த இனம் அழியும் என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டு அந்த எதிர்காலத்தைச் சந்திக்கிறதற்கு நாங்கள் தயாராக வேண்டுமென்பது தான் எங்கள் கோரிக்கை.

இந்த மாதிரியான மோசமான துரோகங்களை இன்றைக்கு நேற்று மட்டுமல்ல 10 வருடங்களுக்கு மேலாக செய்து கொண்டிருக்கின்ற தரப்புக்களை அரசியல் அரங்கில் இருந்த அகற்றி அவர்கள் தமிழ் மக்களின் பெயரைப் பயன்படுத்தி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க முடியாத நிலைமையை உருவாக்காவிட்டால் நாங்கள் தெரிந்து கொண்டு எங்கட தலையில் மண்ணை அள்ளிப் போடுகின்ற வேலையாகத் தான் அதனைக் கருத வேண்டியிருக்கும். ஆகவே நாங்கள் அனைவரும் இதனை மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கிறவர்கள் ராஐபக்ச தரப்பின் ஊதுகுழலாக மற்றது அவர்களின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகச் செயற்படுபவர்கள் என்று சுமந்திரன் துணிந்து சொல்லியிருக்கின்றார்.

மனித உரிமைகள் பேரவையில் பிரயோசனமில்லை. 2012 ஆம் ஆண்டிலிருந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாக இலங்கை சம்மந்தப்பட்ட இனப்படுகொலை குற்றங்கள் விசாரிக்கப்படாமல் மனித உரிமை பேரவையில் நம்பிக்கை வைத்திருக்கிற வரைக்கும் பொறுப்புக் கூறல் நடைபெறாது என்றும் நாங்கள் சொல்லி வருகின்றோம்.

ஏனெனில் பேரவையானது அரசாங்கத்தை மீறி எதுவுமே செய்யாது என்ற விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற அதே வேளையில் பேரவையில் நிறைவேற்றப்படுகின்ற தீரமானத்தில் பிரயோசனம் இல்லை என்றும் நாங்கள் சொன்ன போது சுமந்திரன் அன்றைக்கும் சொன்னவர் அந்தத் தீர்மானங்களை அதாவது 2012 ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தவர்கள் விமர்சித்தவர்கள் இந்த அரசாங்கத்திற்கு முழுமையாக விலை போய் இந்த அரசாங்கத்தின் நலன்களைப் பேனுகின்றவர்கள் என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தை பத்து வருசத்திற்கு மேலாக் மேற்கொண்டு வந்தவர்.

அத்தோடு ஒரு சர்வதேச விசாரணை என்றதை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 2014 - 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையோடே சர்வதேச விசாரணை என்பது முற்று முழுதாக முடிந்து விட்டது இனி ஒரு உள்ளகப் பொறிமுறையுடாகத் தான் பொறுப்புக் கூறல் என்ற விடயம் முன்னெடுக்கப்படும் எனச் சொன்ன சுமந்திரன் கடந்த ஐனவரி 15 ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில் அவருடைய அந்தக் கட்சி கையொப்பம் இடுவதால் அவர்கள் பத்து வருசமாகச் சொன்னதும் பொய் என்ற விடயத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தங்களுடைய செயல்களில் சம்மந்தன் அந்தக் கடிதத்தில் கையொப்பம் இடுவதோடு பொறுப்புக் கூறல் என்ற விடயம் மனித உரிமைப் பேரவைக்குள்ளால் ஒருநாளும் தமிழர்கள் அடையப் போவதில்லை என்றதை அவர்களாகவே ஒப்புக் கொண்டார்கள். ஆகவே அப்பட்டமான பொய்யைச் சொல்லி இந்த இணத்தை பத்து வருசத்திற்கு மேலாக ஏமாற்றியது சுமந்திரனும் கூட்டமைப்பும் தான் என்பதை எமது மக்கள் மறந்து விடக் கூடாது.

ஆகவே அன்று முதல் இன்று வரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகத் தெளிவாக எமது மக்களுக்கு கூறிவருகின்றது என்னவென்றால் பொறுப்புக் கூறல் என்ற விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது ஒரு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாகவோ அல்லது சர்வதேக குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஊடாகவோ மட்டும் தான் அடையலாம்.

அதனைவிட வேறு எந்தவொரு வழியிலம் பொறுப்புக் கூறலை அடைய முடியாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். இந்த விடயங்கள் தற்போதைய வரைபு அல்லது கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேககங்களையும் மக்கள் வைத்திருக்கக் கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இன்றைக்கும் ராஐபக்ச தரப்பை மட்டுமல்ல இனப் படுகொலை செய்த அத்தனை இரானுவத்திற்கும் இந்த இனத்தை அழித்த அத்தனை நபர்களையும் காப்பாற்றிக் கொண்டிருப்பது இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் என்பதை எமது மக்கள் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு சர்வதேசத்தால் உலகத்தாலே முதலாவது ஆளாக மதிக்கப்படுகின்ற அதாவது சர்வதேச சட்டங்கள் சம்மந்தமாக மதிக்கப்படுகின்ற உயர்ஸ்தானிகரே சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு கொண்டு போகலாம் கொண்டு போக வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிற நிலையில் இந்த கூட்டமைப்பின் பேச்சாளர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு போக முடியாது என்றும் ஏனென்றால் பாதுகாப்புச் சபையில் வீட்டோ பவரைப் பாவித்து சீனா தடுக்கும் என்று சொல்கிறார் என்றால் அது எந்தளவு தூரத்திற்கு அப்பட்டமான பொய் என்பதையும் எமது மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இலங்கை எந்தளவு தூரத்திற்கு முக்கியம் என்று சீனா பார்க்கிறதோ அதே போன்று மியன்மாரும் சீனாவிற்கு முக்கியம். ஏனெனில் சீனாவிற்குப் பக்கத்து நாடு இந்த மியன்மார் தான். அவ்வாறு பக்கத்து நாடாக இருக்கக் கூடிய மியன்மாரை நிச்சயமாக சீனா காப்பாற்றியிருக்கும். அப்படிருக்க மியன்மாரும் இலங்கையைப் போல சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குரிய ஒரு உறுப்பு நாடு அல்ல.

 அதாவது ரோம் சாசனத்தில் இலங்கைகயைப் போல மியன்மாரும் கையெழுத்திடவில்லை.
அப்படியிருக்கவும் பாதுகாப்புச் சபைக்குப் போகாமலே இன்றைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தாலே மியன்மார் விசாரிக்கப்படுகின்றது. இந்த உண்மையை சுமந்திரன் திட்டமிட்டு எமது மக்களிடம் மறைக்கின்றார். ஆகவே மாற்று வழிகள் இருக்கிறது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒரு விசாரணையை இலங்கை தொடர்பாக நடாத்துவதற்கு பாதுகாப்புச் சபை ஊடாக மட்டும் தான் போய் அடையலாம் என்றல்ல. இன்றைக்கு மாற்று வழிகளையும் உலகம் கண்டறிந்திருக்கிறது.

அப்படியிருக்கவும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு அந்த உண்மையை எம்முடைய மக்களிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மூடி மறைக்கின்றார்கள் என்றால் இந்த அரசாங்கத்தை தொடர்ந்தும் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே ஒரு நோக்கத்திற்காகவும் வேறு வேறு தரப்புக்களின் நலன்களுக்காகவும் மட்டும் தொடர்ந்தும் துரொகமிழைக்கின்றனர் என்பதை எமது மக்கள் விளங்கிகக் கொண்டு எதிர்காலத்தில் அவர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டுமென்று நாங்கள் தயவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post