கூட்டமைப்பு தலைமை அல்லது தமிழரசோ தவறிழைக்கிறதென்றால் பங்காளிக் கட்சிகள் வெளியேற வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice கூட்டமைப்பு தலைமை அல்லது தமிழரசோ தவறிழைக்கிறதென்றால் பங்காளிக் கட்சிகள் வெளியேற வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice

கூட்டமைப்பு தலைமை அல்லது தமிழரசோ தவறிழைக்கிறதென்றால் பங்காளிக் கட்சிகள் வெளியேற வேண்டும் - கஜேந்திரகுமார் கோரிக்கை



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அல்லது தமிழரசுக்கட்சி துரோகம் இழைக்கிறது, அரசியல் மோசடி செய்கிறது என்று சொல்லிக் கொண்டு பங்காளிக் கட்சிகள் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருப்பது அர்த்தமற்றது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பில் இருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில்  நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்ததாவது...

மனித உரிமைகள் பேரவையின் 46.1 உத்தேச வரைபு தீர்மானத்தை தமிழ் தரப்புக்கும் பலவும் எதிர்த்து அதில் திருத்தங்கள் ஏற்படுத்தி பொறுப்புக்கூறல் விடயத்தில் காத்திரமான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை அதனை ஆதரித்து வரவேற்றிருக்கின்றது. கூட்டமைப்பின் வெற்றியை செயற்பாடு என்பது தமிழ் மக்களுக்கு மீண்டும் முதுகில் குத்தி பாரிய துரோகம் இழைக்கின்ற செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

எனினும் தமிழ் மக்களின் பேரால் கூட்டமைப்பின் தலைமை எடுத்துள்ள இந்த முடிவு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தலைமையின் இத்தகைய முடிவுகளோ தீர்மானங்களோ தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் அதற்கு உடன்படவில்லை என  பங்காளி கட்சிகள்கருத்துக்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

தமிழ் மக்களிற்கு அடிப்படையாக இருக்கின்ற பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் கூட்டமைப்பின் தலைமை அல்லது கூட்டமைப்பின் பேச்சாளர் அல்லது தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் அரசியல் மோசடி செய்து வருகின்றது எனச் சொல்லிக்கொண்டு தொடர்ந்தும் கூட்டமைப்பிலிருந்தே பங்காளிக் கட்சிகள் பயணிப்பது அர்த்தமற்றது.

ஆக இங்கொன்றும் அங்கொன்றும் என கருத்துக்களைக் கூறி நல்ல  பிள்ளையாக நடிப்பதற்கே இந்த பங்காளிக் கட்சிகள் முயலகின்றன. எனவே கூட்டமைப்பின் தலைமை அல்லது தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் பங்காளிக் கட்சிகளின் சம்பந்தமோ அல்லது
 உடன்பாடோ இல்லாமல் செயற்படுகிறது என்று தொடர்ந்தும் கூறிக்கொண்டிருக்க முடியாது.

ஒட்டுமொத்த தமிழ் இனம் சார்ந்த இந்த விடயங்களில் துரோகம் அல்லது மோசடி செய்யப்படுகின்றது என தெரிந்தும் தொடர்ந்தும் இந்தப் பங்காளிகள் கூட்டமைப்பில் இருக்க முடியாது. ஆகையினால் அவர்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பில் பயணிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post