விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு? ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல் - Yarl Voice விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு? ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல் - Yarl Voice

விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு கதறிய வடிவேலு? ஆறுதல் சொன்ன பிரேமலதா.. தீயாய் பரவும் தகவல்




நடிகர் வடிவேலு சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

வடிவேலு ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.இருந்த போதும் விஜயக்காந்த் மூலம் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் வடிவேலு. 

விஜயக்காந்த் நடித்த பல படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நகைச்சுவை நடிகராக உச்சத்தில் இருந்தார் வடிவேலு. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் வடிவேலுவின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். முன்னணி நடிகர்களை காட்டிலும் நகைச்சுவை நடிகரான வடிவேலு அதிக படங்களைக் கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது விஜயக்காந்த் தலைமையிலான தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிர்சாரம் செய்த வடிவேலு, விஜய்காந்தை தரம் தாழ்த்தி விமர்சித்தார்.

இதனால் சினிமா பிரபலங்கள் பலருமே வடிவேலு மீது அதிருப்தி அடைந்தனர். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தேமுதிக பிரதான எதிர்க்கட்சியானது. அதன்பிறகு இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினையால் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் வடிவேலு. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டவுன், நான் 10 வருடமாக லாக்டவுனில் தான் இருக்கிறேன்.

உடம்பில் நடிக்க தெம்பிருந்தும் வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்பது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமா என்று பேசி கண்ணீர்விட்டார். வடிவேலு கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு குறித்த மேலும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்ததாக கூறப்படுகிறது.

அப்போது விஜயக்காந்திடம் கண்ணீர் விட்டு அழுது வடிவேலு மன்னிப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தான் பேசியதெல்லாம் தவறுதான் என்று வடிவேலு கூறியதாகவும் கூறப்படுகிறது. அப்போது கேப்டன் ஒன்றும் நினைக்க மாட்டார் என பிரேமலதா அவருக்கு ஆறுதல் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post