இந்தியாவில் இரட்டை உருமாறிய கொரோனா - இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - Yarl Voice இந்தியாவில் இரட்டை உருமாறிய கொரோனா - இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - Yarl Voice

இந்தியாவில் இரட்டை உருமாறிய கொரோனா - இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைஇந்தியாவில் இரட்;டை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் இலங்கை எச்சரிக்கையுடன் உள்ளதாக இலங்கையின் சுகாதாரஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் மாதிரிகளை எழுமாற்றாக சோதனை செய்துவருகின்றது என  சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இந்த இரட்டை உருமாறிய கொரோனா குறித்து எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை எழுமாற்றாக சோதனை செய்வது வழமை வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் நாங்கள் அவர்களை சோதனை செய்துவருகின்றோம்  என தெரிவித்துள்ளசுகாதாரஅதிகாரிகள்  உலகில் பல வகையான கொரோனாவைரஸ்கள்காணப்படுகின்றன இதன் காரணமாக நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம்எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post