மேடையில் காதல் கதையை வெளிப்படையாக பகிர்ந்த மோகன்லால் மனைவி - Yarl Voice மேடையில் காதல் கதையை வெளிப்படையாக பகிர்ந்த மோகன்லால் மனைவி - Yarl Voice

மேடையில் காதல் கதையை வெளிப்படையாக பகிர்ந்த மோகன்லால் மனைவிநடிகர் மோகன்லால் முதல் முறையாக இயக்கும் Barroz: The Guardian of D'Gama's Treasure படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மம்முட்டி, ப்ருத்விராஜ், பிரியதர்ஷன் என மலையாள திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 விழாவில் கலந்து கொண்ட போது மேடையில் பேசிய மோகன்லாலின் மனைவி சுசித்ரா, முதல் முறையாக வெளிப்படையாக தங்களின் காதல் கதையை தெரிவித்தார். அவர் பேசுகையில், அவர் நடித்த முதல் படமான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தை பிறகு அவரை எனக்கு பிடிக்காது. அதில் அவர் ரவுடியாக நடித்திருந்ததால் அவரை வெறுத்தேன்.

அதற்கு பிறகு தொடர்ந்து நெகட்டிவ் வேடங்களிலேயே அவர் நடித்தார். இதனால் எனது வெறுப்பும் தொடர்ந்து கொண்டே இருந்தது. அவர் வேலையில் ரொம்ப பெர்ஃபெக்ட் என்பதால் அவரை வில்லனாகவே நான் பார்த்தேன். அவர் நடித்த 'என்டே மம்மட்டிகுட்டியம்மாக்கு' படத்தை பார்த்த பிறகு தான் அவரை பிடிக்க ஆரம்பித்தது.

விரைவில் இருவரும் காதலிக்க துவங்கி, பிறகு திருமணம் செய்து கொண்டோம். மோகன்லால் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். 

அதனால் எனக்கு பிடித்த டைரக்டராகவும் அவர் மாறுவார் என நம்புகிறேன்
கடந்த காலங்களில் எல்லா விழாக்களிலும் நான் பின் சீட்டில் இருந்தே பார்த்துள்ளேன். 

எனது மகன் பிரணவ் மோகன்லால் நடித்த முதல் படத்தின் விழாவில் தான் நான் முதன் முதலில் பேசினேன்.இன்று என் கணவரின் வாழ்க்கையில் முக்கியமான தருணம்.

 அதில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேசுகிறேன். ஒரு நடிகராக அவர் அனைத்து சாதனைகளையும் படைத்து விட்டார். இப்போது டைரக்டராக அடியெடுத்து வைத்துள்ளார். அதனால் நான் கண்டிப்பாக பேச வேண்டும் என்றே மேடை ஏறினேன் என்றார்.

மோகன்லால் இயக்கும் முதல் படத்தின் சூட்டிங் கொச்சியில் நேற்று துவங்கியது. பெரிய பட்ஜெட் 3 டி படமாக இது உருவாக்கப்பட உள்ளது. போர்ச்சுகல், இந்தியா, ஆப்பிரிக்காவில் நடப்பது போன்ற பெரிய செட் அமைக்கப்பட உள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post