இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் படம் ஒன்றில் நடித்து வந்தார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, இவர் தமிழின் மீது வைத்திருந்த அளப்பறிய அன்பைப் பற்றி தான் நம் அனைவருக்கும் தெரியுமே. இந்நிலையில் தமிழ் படம் ஒன்றில் அறிமுகமாகி அனைவருக்கும் “சர்ப்ரைஸ்” கொடுத்தார் என்று தான் கூற வேண்டும்.
ஜான் பால் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இந்த படத்தை இயக்க, அர்ஜூன், லாஸ்லியா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஃப்ரெண்ட்ஷிப் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வெள்ளை வேஷ்ட்டி என்று முழுக்க முழுக்க தமிழ் பையனாகவே மாறி இருக்கிறார் ஹர்பஜன் சிங். இந்த திரைப்பட டீசருக்கு சக விளையாட்டு பிரபலங்களிடம் இருந்து நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறார் ஹர்பஜன்
Post a Comment