இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஹக்கீம் கடும் கண்டனம் - Yarl Voice இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஹக்கீம் கடும் கண்டனம் - Yarl Voice

இரணைதீவில் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஹக்கீம் கடும் கண்டனம்
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை  இரணைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடுமையாகச் சாடியுள்ளார்.

முஸ்லீம் சமூகத்தினரை அரசாங்கம் துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உடல்களை இரணைதீவிற்கு அகற்றுவது-அவர்கள் போலியான கதையொன்றை உருவாக்கினார்கள். அது உண்மையென்று நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள் என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையற்ற நிலையில் உள்ள அதிர்ச்சியடைந்துள்ள சமூகமொன்றை துன்புறுத்தி இன்பம் காணும் அவர்களின் நடவடிக்கைகளுக்கு முடிவே இல்லை எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் உள்ள ஒரு பகுதி நிலத்தை இதற்காக ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழு இந்த பகுதியை தெரிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post