நெடுந்தீவிற்கு புதிய பேருந்து - Yarl Voice நெடுந்தீவிற்கு புதிய பேருந்து - Yarl Voice

நெடுந்தீவிற்கு புதிய பேருந்துநெடுந்தீவு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய யாழ்மாவட்ட சிறிலங்கா பொதுஜன முன்னணியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பிதுரை ரஜீவினால் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று இன்றைய தினம் நெடுந்தீவு மக்களின் பயன்பாட்டுக்கென பிரதேச செயலர் சத்தியசோதி அவ ர்களிடம் மாவட்ட அமைப்பாளரால் கையளிக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் நெடுந்தீவு பெரமுனவின் அமைப்பாளரும் வனஜீவராசிகள் வனப்பாதுகாப்பு அமைச்சரின் வடமாகாண பணிப்பாளருமான பரமேஸ்வரன்(ஈசன்), பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர்  அருந்திக்க பெர்னாண்டோவின் வடமாகாண இணைப்பாளர் பாலரமணன் ,வலிகாமம் கிழக்கு அமைப்பாளர் நடேசன் மற்றும் தென்மராட்சி பிரதேச அமைப்பாளரும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினருமான சர்வா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post