விஜய் வீட்டுல சோதனை நடந்தப்போ மட்டும் வாயே திறக்கல.. மாஸ்டர் ஹீரோயினை விளாசும் தளபதியன்ஸ்! - Yarl Voice விஜய் வீட்டுல சோதனை நடந்தப்போ மட்டும் வாயே திறக்கல.. மாஸ்டர் ஹீரோயினை விளாசும் தளபதியன்ஸ்! - Yarl Voice

விஜய் வீட்டுல சோதனை நடந்தப்போ மட்டும் வாயே திறக்கல.. மாஸ்டர் ஹீரோயினை விளாசும் தளபதியன்ஸ்!டாப்ஸி வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற ரெய்டு குறித்து கருத்து கூறிய நடிகை மாளவிகா மோகனனை நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர்.

 பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோரின் விடுகளில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.

இதில் 650 கோடி ரூபாய் வரை வருமான வரி மோசடி நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆதரவும் எதிர்ப்பும் இதனிடையே டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனனும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்ததாக தெரிகிறது.

இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள், மாஸ்டர் படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் ரெய்டு நடந்த போது என்ன வாயே திறக்கவில்லையே. இப்போது பேசுகிறீர்களே என்று கேட்டு வருகின்றனர்.

அப்போது கண்டிக்காமல் இப்போது பாலிவுட் என்றதும் மட்டும் கண்டிப்பதற்கு என்ன காரணம் என்றும் கேட்டு வருகின்றனர். மலையாள நடிகையான மாளவிகா மோகனன், தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

அடுத்தப்படத்திலேயே நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார் மாளவிகா மோகனன். தற்போது தனுஷுடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post