சுகாதார தொண்டர் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரப்படும் - யாழில் அமைச்சர் மகிந்த - Yarl Voice சுகாதார தொண்டர் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரப்படும் - யாழில் அமைச்சர் மகிந்த - Yarl Voice

சுகாதார தொண்டர் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரப்படும் - யாழில் அமைச்சர் மகிந்தயாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள்  ஜனாதிபதியை சந்தித்து கதைப்பதற்கு தான் ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உறுதி வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 17  நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து போராட்டுத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிய கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே போராத்தில் ஈடுபட்ட சுகாதார தொண்டர்களிடம் கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் போதே சுகாதார தொண்டர்களிடம் அமைச்சர் இவ்வாறு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post