யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நெல்லியடி மைக்கல் நேசக்கரத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன - Yarl Voice யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நெல்லியடி மைக்கல் நேசக்கரத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன - Yarl Voice

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நெல்லியடி மைக்கல் நேசக்கரத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன



யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் யுத்தத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த 52 மாணவர்களுக்கு நெல்லியடி மைக்கள் நேசக்கரத்தினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மைக்கல் நேசக்கரத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

மேற்படி அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் த.வேணுகானன் தலைமையில் நேற்று (21)  ஞாயிற்றுக்கிழமை வல்லிபுரம் ஆழ்வார் ஆலய அர்ச்சகர் ஸ்கந்தசபேசக்குருக்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி ச.ஞானச்சந்திரன், நேசக்கரம் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது மேற்படி அமைப்பிற்கென தயாரிக்கப்பட்ட ரி-சேர்ட் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அமைப்பின் கொள்கைவிளக்கப் பாடல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் போன்றோருக்கு வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், யுத்தத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு மனிதாபிமானச் செயற்றிட்டங்களை மைக்கல் நேசக்கரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மனிதாபிமான செயற்பாடுகளால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நன்மை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post