யாழ் போதனாவில் கொரோனாவில் பெண் உயிரிழப்பு - Yarl Voice யாழ் போதனாவில் கொரோனாவில் பெண் உயிரிழப்பு - Yarl Voice

யாழ் போதனாவில் கொரோனாவில் பெண் உயிரிழப்புயாழ்.போதனா வையத்தியசாலையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய 

சுதுமலையை சேர்ந்த 63 வயதான குறித்த பெண் திடீர் மூச்சு திணறல் காரணமாக மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 
 
அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பணிப்பாளர் கூறியுள்ளதுடன் யாழ்.கோப்பயன்மணல் மயானத்தில் 

உயிரிழந்த பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மின் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post