பொலிஸாரின் தாக்கப்பட்டவர்களை சந்தித்த சிறிதரன் எம்பி - Yarl Voice பொலிஸாரின் தாக்கப்பட்டவர்களை சந்தித்த சிறிதரன் எம்பி - Yarl Voice

பொலிஸாரின் தாக்கப்பட்டவர்களை சந்தித்த சிறிதரன் எம்பி
நேற்றைய தினம் தருமபுரம் பொலீசாரின் தாக்குதலுக்கு உள்ளானோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  இன்று சந்தித்து விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

வட்டக்கச்சியில் அண்மையில் கத்திக்குத்துக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்திருந்தார். அவரின் மனைவி மற்றும் சகோதரர்கள் மீது நேற்றைய தினம்  பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.  

பொலீசாரின் பக்கச்சார்பான கொடூர அராஜகத்தனமான செயலினை சிறீதரன் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளானோரிடம் இருந்து கேட்டறிந்து கொண்டார். 

அவரின் உறவினர்களால் பொலீசாரினால் தற்போது மேற்கொள்ளும் விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் பக்கச்சார்பான முறையில் செயற்படுவதாகவும் கொல்லப்பட்டவரின் மனைவி மற்றும் சகோதரர்களைத்தான் அவர்கள் தாக்குகின்றார்கள் என்று எவ்வாறு நம்புவது என்பது தொடர்பிலும் கேள்வி எழுப்பினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post