யாழ் நகரில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
யாழ் கஸ்தூரியார் வீதியிலுள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றிற்கு முன்பாக உள்ள வீடொன்றின் மீதே இத் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டிற்கு இரண்டிற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு வேளை சென்ற இனந்தெரியாத கும்பலொன்றே இத் தாக்குதல் சம்பவத்தை நடாத்தியுள்ளது.
இதன் போது வீட்டின் முன்னால் கண்ணாடிகள் அடித்து நொறுக்கி வீட்டிலிருந்த பொருட்களும் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment