முல்லையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - Yarl Voice முல்லையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - Yarl Voice

முல்லையில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
முல்லைத்தீவு மாவட்ட மாங்குளம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட  பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு எதிர்கால இலக்குகளுக்கான தயார்படுத்தல் எனும் தொனிப்பொருளிலான  கருத்தமவர்வும் இன்று காலை மாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. 

ஒட்டிசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ராணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில்  பிரதேச இளைஞர்  சம்மேளன தலைவி தனுஷியாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 26 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

   இந் நிகழ்வில் சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர்,  ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின்  அமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சு.நக்கீரன் , கிளிநொச்சி மாவட்ட சம்மேளன தலைவர் அஜந்தன், ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இரதீசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலமர்வை முன்னெடுத்தனர்.

 இந்நிகழ்வில் மாணவர்களோடு பெற்றோர்கள், சம்மேளன உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post