தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும் ஊடகப் பேச்சாளருமான சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொண்டதாகக் கூறி இன்றைய தினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்த பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றன அடிப்படையில் அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இந்து முன்னணியின் தலைமை அலுவலகத்தில் சுகாசிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்போது போலீசார் மேற்கொண்ட விசாரணை தொடர்பில் சுகாஸ் தெரிவித்துள்ளதாவது...
ஜனநாயகப் பேரணியில் கலந்து கொண்டது உண்மை. அதற்காக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயார்.
தமிழரின் இனவிடுதலை அரசியலை சிங்களத்தின் அடக்குமுறைச் சட்டங்களுக்குள் அடகுவைக்க ஒருபோதும் தயாரில்லை. பொலிகண்டி முடிவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment