மாவையை தவிர ஏனைய அனைவரும் இளையவர்களாக களமிறக்கப்பட வேண்டும் - சிறிதரன் வலியுறுத்து - Yarl Voice மாவையை தவிர ஏனைய அனைவரும் இளையவர்களாக களமிறக்கப்பட வேண்டும் - சிறிதரன் வலியுறுத்து - Yarl Voice

மாவையை தவிர ஏனைய அனைவரும் இளையவர்களாக களமிறக்கப்பட வேண்டும் - சிறிதரன் வலியுறுத்துமாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக இறக்கப்பட்டால்; மிகுதி அனைத்து வேட்பாளர்களும் இளையவர்களே களம் இறக்கப்பட வேண்டும் என சிறீதரன் எம்.பி கோரியுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் எங்கள் கட்சியில் பல இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காததால் வேறு கட்சியில் தேர்தலில் நின்று வென்றிருந்தார்கள் பலர். அவர்களில் பல தமிழ் தேசியத்தை நேசிக்கும் இளைஞர்கள், ஒற்றுமையை விரும்பும் இளைஞர்கள் தமிழரசுக் கட்சிக்கு வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

கட்சிக்குள் கூட்டுப்பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மேம்படுத்தப்பட வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்ற நாம், தேர்தலில் தோற்ற எம் சக வேட்பாளர்களையும் அரவனைத்து செல்லும் மனநிலையில் இருக்க வேண்டும். 

கட்சியில் பொறுப்புக்கள் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படக்கூடிய களம் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும். 

கட்சிக்குள் ஒவ்வொரு ஆதரவாளர்களும் ஒருவொருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் தாக்கி பேசும் நிலை மாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு தலைவர்களும் தங்கள் ஆதரவாளர்களை கட்டுபடுத்த வேண்டும். இவை தான் கட்சியின் ஒற்றுமையை வளர்க்கும்.

இனிவரும் தேர்தல்களில் களம் இறக்கப்படும் வேட்பாளர்களின் கல்வித்தரம், சமூக ஈடுபாடு, சமூக அந்தஸ்து ஆகியவை பார்க்கப்பட்டே வேட்பாளர்களா இறக்கப்பட வேண்டும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post