ஈழத் தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியா பெற்றுக் கொடுக்க வேண்டும் - சபா குகதாஸ் வேண்டுகோள் - Yarl Voice ஈழத் தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியா பெற்றுக் கொடுக்க வேண்டும் - சபா குகதாஸ் வேண்டுகோள் - Yarl Voice

ஈழத் தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியா பெற்றுக் கொடுக்க வேண்டும் - சபா குகதாஸ் வேண்டுகோள்




 ஈழத் தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியா பெற்றுக் கொடுக்க வேண்டும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைகள் இனப் படுகொலைகள் போன்றவற்றுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை இந்திய மத்திய அரசிடமே உள்ளது. 

அதற்கு காரணம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் இன்றைய இலங்கைப் பிரதமர் மகிந்த ராஐபக்ச அன்றைய ஐனாதிபதியாக இருந்தார்.  

அவரே அன்று இந்திய அரசிடம் கூறிய விடையம் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு எங்களுக்கு உதவி புரியுங்கள் நான் அவர்களை அழித்த பின்னர் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவேன் என்று தான்.

இதனை மகிந்த கூறி 12 ஆண்டுகள் கடந்து விட்டது புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்இ  இந்தியா உதவி செய்தமைக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக  மகிந்த இகோட்டாபய போன்றோர் பாராட்டுக்களையும் நன்றியையும் பல தடவைகள் தெரிவித்து விட்டனர். 

ஆனால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வுக்கான எந்த முயற்சிகளும் இன்றி மேலும் அடக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குதல்களுக்கும் உள்ளாகி பரிகார நீதியும் காலம் தாழ்த்தப்பட்டு நீர்த்துச் செல்கின்றது.

 பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இந்தியா தங்களை காப்பாற்றும் தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கும் போது ஐ நா மனித உரிமைப் பேரவையில் 46ஃ1 தீர்மானத்தில் நடுநிலை வகித்தமையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 தமிழர்களுக்கு இந்தியா மீது அதிர்ச்சி ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் இல்லாத வகையில் இம்முறை வந்த மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் இந்தியாவால் இலங்கை அரசியலமைப்பில்  1987 கொண்டுவரப்பட்ட 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுழ்ப்படுத்தவும் இ
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்இ மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் உள்ளிட்ட விடையங்கள் கொண்டுவரப்பட்டன. 

இதே விடையத்தை பாரதப் பிரதமர் நரேந்திரமோதி இலங்கை அரச பிரதிநிதிகளை சந்திக்கும் போது அண்மைக்காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளார். 

ஆனால் ஐ நா தீர்மானத்தில் இந்தியா வலியுறுத்தும் விடையம்  தீர்மானமாக இருந்தும் அதனை ஆதரிக்காது நடுநிலை வகித்தமை தான் ஈழத் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
  
 பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் அதனை இந்தியா பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அரசு போன்று வேறு தரப்புக்களை நாடாது பாரத தேசத்தையே நம்பினார்கள்.

 தமிழ்த் தலைமைகளும் பாரிய நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தார்கள். ஆனால் ஐெனிவாவில் இந்தியாவின் முடிவுகள் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பிற்கு என்றுமே புவியியல் ரீதியாக முக்கியமானவை. அவற்றை வேறு சக்திகள் காலணித்துவத்திற்கு உட்படுத்தாமல் ஈழத் தமிழர்களின் ஆளுகையில் இருப்பதை உறுதி செய்வது இந்தியாவின் இராஐதந்திரப் பொறுப்பு.

மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடிய  ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொடுப்பதுடன் நிலையான தீர்வினையும் சமாதானத்தினையும் காலம் தாழ்த்தாது இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான மத்தியஸ்தத்துடன் இந்திய மத்திய அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனையே ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post