ஸ்ரீ லங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த கோரி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இனைந்து வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூரில் சுழற்சி முறையிலான தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் து இந்த போராட்டத்திற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து அரசியல் தரப்பினரையும் பொதுமக்களையும் மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறும் இதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறும் கோரியுள்ளது.
Post a Comment