டாம்வீதியில் சூட்கேசிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை – பொலிஸ் பேச்சாளர் - Yarl Voice டாம்வீதியில் சூட்கேசிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை – பொலிஸ் பேச்சாளர் - Yarl Voice

டாம்வீதியில் சூட்கேசிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலையை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை – பொலிஸ் பேச்சாளர்
புறக்கோட்டை டாம்வீதியில் சூட்கேசிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலைiயை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாகமீட்கப்பட்டவர் குருவிட் தெப்பன்வ பகுதியை சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.
நேற்று உறவினர்கள் அவரது உடலை அடையாளம் காட்டியுள்ளனர் பொலிஸ்பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

எனினும் தலை துண்டிக்கப்பட்டுள்ளதால்  உடல் யார் என்பதை உறுதி செய்வதற்காக அவரது தாயாரை மரபணுபரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்துகொண்ட பொலிஸ்உத்தியோகத்தரும் குறிப்பிட்ட பெண்ணும் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற பொலிஸார்அறையிலும் கழிவறையிலும் இரத்தக்கறைகளை அவதானித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தல பொலிஸ்நிலையத்தை சேர்ந்த உபபரிசோதகர் ஒருவரே இந்த கொலையை செய்துள்ளார் என்ற சந்தேகம் நிலவுகின்றது அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விசாரணைகளின்போது குறிப்பிட்ட பொலிஸ்உத்தியோகத்தர் மார்ச் முதலாம் திகதி ஹன்வெலிற்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு ஒரு கத்தியையையும் இரு பிரயாணப்பைகளையும் வேண்டியுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post