வடக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை - Yarl Voice வடக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை - Yarl Voice

வடக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை
வடக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு உட்பட்ட பல வலயக் கல்விப் பணிப்பாளர்களிற்கு மாகாண மட்ட  இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அறிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தில் தற்போது 12 கல்வி வலயங்கள் உள்ள அதேநேரம் 13 வலயத்திற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால் தற்போது பணியில் உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்களை இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

தற்போது பணியில் உள்ள 12 வலயக் கல்விப் பணிப்பாளர்களில் யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த  மாதமும் வலிகாமம் கல்விப் பணிப்பாளர் அடுத்த மாதமும் ஓய்வு பெறும் அதே நேரம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் யூலை மாதம் ஓய்வு பெறுவதனால் இந்த மூன்று வலயக் கல்விப் பணிப்பாளர்களும் இடமாற்றப் பட்டியலிற்குள் உள் அடங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இவற்றின் அடிப்படையில் வடக்கின் ஏனைய 9 வலயக் கல்விப் பணிப்பாளர்களில் இருந்து அதிகமானோரை இடமாற்றம் செய்வதற்கு மாகாண ஆளுநரின் ஒப்புதலுடன் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேநேரம் இந்த இடமாற்ற ஏற்பாட்டினை அறிந்துகொண்ட இரு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தமது இடமாற்றத்தை மீள்பரிசீலனை  செய்யுமாறு விண்ணப்பித்துள்ளனர். இருந்தபோதும் விண்ணப்பித்தவர்கள் கட்டாயம் இடமாற்றப்படவேண்டிய பட்டியலில் உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post