யாழில் பேருந்து நடத்துனரின் முன்மாதிரியான செயற்பாடு - பலரும் பாராட்டு - Yarl Voice யாழில் பேருந்து நடத்துனரின் முன்மாதிரியான செயற்பாடு - பலரும் பாராட்டு - Yarl Voice

யாழில் பேருந்து நடத்துனரின் முன்மாதிரியான செயற்பாடு - பலரும் பாராட்டு
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட மூன்று லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைப்பேசி என்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ.போ.ச வின் பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே பணம், கைப்பேசி என்பவற்றை கண்டெடுத்தார்.

251,000 ரூபா பணம், 70000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி என்பனவே கண்டெடுக்கப்பட்டது. 

இவற்றை இன்று பருத்தித்துறை முகாமையாளரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அவரது முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பருத்தித்துறை சாலை நிர்வாகம், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post