கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக செல்வாக்கை பயன்படுத்தவில்லை- சனத் - Yarl Voice கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக செல்வாக்கை பயன்படுத்தவில்லை- சனத் - Yarl Voice

கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக செல்வாக்கை பயன்படுத்தவில்லை- சனத்
கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக தனது செல்வாக்கை பயன்படுத்தவில்லை என சனத்ஜெயசூர்ய  தெரிவித்துள்ளார்.

தனது பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நிலையம் எதுவுமில்லாததன் காரணமாக தான் சுகாதார அதிகாரிகளின் உதவியை நாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் கட்டுப்பாட்டிற்கான இராஜாங்க அமைச்சின் செயலாளரை தான் தொடர்புகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தன்னை பொரளையில் உள்ள தடுப்பூசி நிலையத்திற்கு செல்லும்படி கேட்டுக்கொண்டார் அங்கு நான் தடுப்பூசியை பெற்றுக்கொண்டேன் என சனத்ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்காக நியாயமற்ற விதத்தில் இலக்கு வைக்கப்படுவதாக உணர்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post