கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி - Yarl Voice கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டி - Yarl Voice

கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டிதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்

மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கின்றன.

மக்கள் நீதி மய்யம் சார்பாக ஏற்கெனவே முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அதன்படி சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், சென்னை தி.நகரில் பழ.கருப்பையா, மயிலாப்பூர் தொகுதியில் நடிகை ஸ்ரீப்ரியா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அத்தொகுதியில் நடிகர் ஆனந்தபாபு களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “என் வாழ்வின் முக்கிய கட்டத்தில் நிற்கிறேன். கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். ஆனால் ஊழல் கோட்டையாக கொங்கு பகுதி உள்ளது அதை மாற்ற வேண்டும். கடமைகளை செய்துள்ளோம் மேலும் வாய்ப்பு கொடுத்தால் கூடுதலாக செய்வோம் என்கிற வித்தியாசமாக எங்கள் வேட்பாளர்கள் பிராசாரத்தை துவங்கியுள்ளனர். எங்கள் வேட்பாளர்கள் தமிழகத்திற்கான அன்பு பரிசு” என்று கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார். எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக தாசப்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
.

0/Post a Comment/Comments

Previous Post Next Post