ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது ஸ்பெஷலான நாள்! 'மனைவியுடன் செல்ஃபி'.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க! - Yarl Voice ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது ஸ்பெஷலான நாள்! 'மனைவியுடன் செல்ஃபி'.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க! - Yarl Voice

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது ஸ்பெஷலான நாள்! 'மனைவியுடன் செல்ஃபி'.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
ரோஜா திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

அடுத்த சில படங்களில் இந்தியாவையும், 'ஸ்லம்டாக் மில்லியனர்'  படத்தில் ஆஸ்கார் விருதுகளைப் பெற்று உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில் தமது 25 வது திருமண நாள் சிறப்பு தினத்தை முன்னிட்டு, மனைவியுடன், தானும் இருக்கும் செல்ஃபி படத்தை வெளியிட்ட ரஹ்மான், அதற்கு ‘25 + 1’ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

1997-ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சைரா பானுவை மணந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தம்பதிக்கு இப்போது கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் மற்றும் அமீன் ரஹ்மான் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். இவர்களும் சிறு வயதிலேயே இசைத்துறையில் வளர்ந்து வருவதுடன் சாதனைகளையும் செய்து வருகின்றனர்

இதனிடையே‘99 சாங்ஸ்’ என்கிற ரொமாண்டிக் படத்தில்  கதை எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாகியுள்ளார்.  இந்த படம் 2021 ஏப்ரல் 16-ஆம் தேதி தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. முழுக்க முழுக்க ரஹ்மானின் கதையோடு இழைந்த  மியூசிக் ட்ரீட்டும் இதில் உள்ளதால், இந்த படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post