மியன்மாரில் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை - Yarl Voice மியன்மாரில் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை - Yarl Voice

மியன்மாரில் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை




மியன்மாரில் ஏழு வயது சிறுமி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டச ம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்டலாயில் உள்ள வீட்டில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மண்டலாயில்  துப்பாக்கி சூட்டு காயங்களால் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என இறுதிநிகழ்வுகளை நடத்துபவர்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

வீட்டினுள் தந்தையுடன் சிறுமி காணப்பட்டவேளை படையினர் தந்தையை இலக்குவைத்தனர்;
 இதன்போதே சிறுமி கொல்லப்பட்டார் என உள்ளுர்ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவ முதலுதவி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் 19வயது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
14 வயது சிறுவன் ஒருவன் மன்டலாயில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர்  7வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறித்து சேவ் தசில்ரன் கடும்கண்டனம் வெளியிட்டுள்ளது.

சிறுவர்கள் கொல்லப்படுவது குறிப்பாக அவர்கள் வீட்டில் இருக்கும்போது கொல்லப்படுவது கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ள சேவ்தசில்ரன் நாளாந்தம் பல சிறுவர்கள் கொல்லப்படுவது மனித உரிமைகளை முற்றாக படையினர் புறக்கணித்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post