ஜெனிவா தீர்மானத்தை சரியான முறையில் தமிழர் தரப்பு அனுக வேண்டும் - அரவிந்தன் கோரிக்கை - Yarl Voice ஜெனிவா தீர்மானத்தை சரியான முறையில் தமிழர் தரப்பு அனுக வேண்டும் - அரவிந்தன் கோரிக்கை - Yarl Voice

ஜெனிவா தீர்மானத்தை சரியான முறையில் தமிழர் தரப்பு அனுக வேண்டும் - அரவிந்தன் கோரிக்கை



பிரித்தானியாவின் அனுசரனையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் முன்னேற்றகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாளாள் யாழ்மாநரகர சபையின் உறுப்பினவர் ச.அரவிந்தன்


 இப்பிரேரணை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கதுடன் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து களச்சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்தி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.


.நா.மனித உரிமைப்பேரவையில் பிரித்தானியாவின் அனுசரனையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்அவர் மேலும் தெரிவிக்கையில்..



ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் பிரித்தானியாவின் அனுசரனையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் முன்னேற்றகரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது .


இலங்கையில் இனவாதப்போக்குடன் சிறுபான்மை இனங்களை அடக்கி கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை சரியான முறையில் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் செயற்பாடுகளில் அசமந்தப்போக்கை கடைப்பிடித்து வந்த இலங்கை அரசுக்கு பாரிய அளுத்தத்தை ஐ.நா பிரேரணை ஊடாக சர்வதேச நாடுகள் வழங்கியுள்ளதுஇந்த வாக்கெடுப்பில் இந்தியா ஜப்பான் போன்ற 14 நாடுகள் நடுநிலமை வகித்திருந்தாலும் இந்தியா ஜப்பானின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கின்றோம்


வாக்கெடுப்புக்கு முன்னர் இந்தியப் பிரதிநிதி வழங்கிய முன்னுரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வைக்காண இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்தி மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் இலங்கையில்வாழுகின்ற சிறுபான்மை இன மக்கள் சமத்துவமாகவும் கெளரவத்துடனும் சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தார்


இந்த நிலைப்பாட்டை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செயற்படுகின்ற தமிழ்த்தேசியக் கட்சிகள் கவனத்தில் கொண்டு அதற்கான கள நிலவரங்கைள உருவாக்குவதற்கு இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக செயற்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான ஒரு பாதுகாப்பான எமது பிரதேசங்களில் நாங்களே எங்களை ஆளுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு தமிழ்த்தேசியத்துடன் செயற்படும் கட்சிகள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post