சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் மிகவும் முக்கியமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலிய ஆகியநாடுகளின் தலைவர்களுடனான மெய்நிகர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி இதனை சந்தித்துள்ளார்.
சீனாவின் அதிகரித்து வரும் இராணுவ பொருளாதார வல்லமையை அமெரிக்கா எதிர்கொள்வதற்கு அவசியமான இந்தியா ஜப்பான் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பைடன் மெய்நிகர் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
வெளிப்படையான சுதந்திரமான இந்தோ பசுபி;க் எங்கள் நாடுகள் ஒவ்வொன்றிதும் எதிர்காலத்திறகு அவசியமானவை என பைடன் தெரிவித்தார் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா உங்களுடனும் பிராந்தியத்தின் சகாக்கள் நண்பர்களுடன் இணைந்து ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்காக பணியாற்றுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் உருவாக்கப்படுவதை உறுதி செய்வத நோக்கி நான்கு நாடுகளும் வலுவான விதத்தில் முன்னேறவேண்டும் என ஐப்பான் பிரதமர் யொசிகிடே சுகா தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா அவுஸ்திரேலிய தலைவர்களும் பிராந்திய பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
Post a Comment