இலங்கை சட்டமே பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டது - சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவிப்பு - Yarl Voice இலங்கை சட்டமே பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டது - சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவிப்பு - Yarl Voice

இலங்கை சட்டமே பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டது - சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவிப்பு
இலங்கையின் அரசியல் யாப்பில் ஆண்-பெண் சமத்துவம் பகிரப்பட்டாலும்  பெண்கள் பலவீனமானவர்கள் எனக் கருதி சட்டத்தில் விசேட ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன யாழ் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட பெண்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்த மகளிர் தின விழாவில் பங்குபற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் சில பிரச்சினைகள் தீர்க்கப்படும் சில பிரச்சினைகள் வடிவம் மட்டும் மாறிய நிலையிலும் காணப்படுகிறது.

covid-19 சூழ்நிலையால் பல பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகி நிலையில் வன்முறை செய்த வரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு வீட்டுக்குள்ளே முடக்கப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது.

சட்டங்கள் ஆணுக்குப் பெண் சமம் என்ற நிலையில் காணப்பட்டாலும் பெண்களை சட்டமே பலவீனமானவர்கள் எனக் கருதி பெண்கள் தொடர்பான கொள்கை வகுப்புக்கள் உருவாக்கப்பட்டமை பெண்களை பாதுகாக்கும் ஏற்பாடாகும்.

covid-19 சூழல் பெண்களை சமூக பொருளாதார நீதியில் பல வகையிலும் பாதிக்கும் செலுத்தியவுடன் குறிப்பாக ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் வயோதிபப் பெண்கள் பல நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர்.

பெண்ணானவள் சமூகத்தில் தான் சார்ந்து மற்றும் பிறர் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் படுகிறாள்.

இவ்வாறான நிலையில் பெண்களுக்கான உரிமை முற்படும்போது அது தொடர்பான நிவாரணத்தை பெறுவதற்கு எத்தனை பெண்கள் வழிமுறைகளை தெரிந்து வைத்துள்ளார்கள் என்ற கேள்வியும்? எழுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும் கடந்த தேர்தல்களில் பெண்களை தேர்தல் அரசியலுக்கு வலிந்து இழுத்து வரப்பட்ட சம்பவங்களே அதிகம் இடம்பெற்றன.

கட்சிகள் திறமையான பெண்களை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வந்தார்களா என்பதற்கு கட்சிகளே பொறுப்பு கூறவேண்டும்.

சமூக மட்டங்களில் திறமையான பெண்களை அடையாளம் காண்பதற்காக பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்றன.

அவ்வாறான நிலையில் ஏன் உள்ளூராட்சி மன்றங்களில் ஏன் திறமையான பெண்கள் உள்ளீர்கப் படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

கட்சிகள் தமது சொற்படி கேட்கின்ற பெண உறுப்பினர்களை
 தேர்தல் அரசியலுக்குள் வாங்கிய நிலையில் சமூகத்தின் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுக்கக்கூடிய பெண் தட்டிக் கழிக்க படுகிறாள்.

ஆகவே சமூக மட்டத்தில் பெண்ணின் பங்களிப்பை உரிய முறையில் இனங்கண்டு அதற்கான தளங்களை உரியவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் போது பெண்களே தமது பிரச்சனைகளை முன்நின்று தீர்க்கக்கூடிய நிலைக்கு மாறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post