நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிடுச்சா? பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்! - Yarl Voice நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிடுச்சா? பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்! - Yarl Voice

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிடுச்சா? பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்!இயக்குநர் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வருவகின்றனர். இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்பது தான் கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் இருவருக்கும் ரகசியமாக திருமணம் ஆகி விட்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினார் நயன்தாரா. படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்ததாக அப்போதே கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால், சில வருடங்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தாமல் இருவரும் ரகசியம் காத்து வந்தனர்.

பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களுக்கு குறிப்பால் உணர்த்தினர். N மற்றும் V எழுத்துக்களான தொப்பிகளை இருவரும் மாற்றி மாற்றி போட்டும் ஏகப்பட்ட ரொமாண்டிக் செல்ஃபிகளை வெளியிட்டும் வைரலாக்கினார்.

மேலும், தீபாவளி, கிறுஸ்துமஸ், நியூ இயர், ஓணம், விநாயகர் சதுர்த்தி என ஏகப்பட்ட பண்டிகைகளை இருவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடிய புகைப்படங்களும் அவ்வப்போது பதிவிட்டு இணையத்தில் பரபரப்பை கிளப்பினர். இருவரும் தங்கள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களையும் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் போட்டோக்களையும் போட்டு ரசிகர்களை வெறுப்பேற்றினர்.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார்.

 இந்நிலையில், இந்த மார்ச் மாதம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த மாதம் வதந்திகள் கிளம்பின.
இந்நிலையில், அதனை உறுதி செய்யும் விதமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள புகைப்படம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி ஏகப்பட்ட சந்தேகங்களையும் கிளப்பி வருகிறது.

 மோதிரம் அணிந்த கையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இதயத்தில் கை வைத்திருக்கும் போட்டோவை தான் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் முகங்கள் ஏதும் தெரியவில்லை. மோதிரத்தை மட்டுமே ஹைலைட் செய்தது போல இருக்கிறது.

 மேலும், விரலோடு உயிர் கூட கோர்த்து என விக்னேஷ் சிவன் கொடுத்துள்ள கேப்ஷன், கிறிஸ்துவ முறைப்படி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனரா? இல்லை நிச்சயம் முடிந்துள்ளதா? என ஏகப்பட்ட சந்தேகங்களை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post