மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது - வெளிவிவகார அமைச்சர் - Yarl Voice மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது - வெளிவிவகார அமைச்சர் - Yarl Voice

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது - வெளிவிவகார அமைச்சர்ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என  வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன  தெரிவித்துள்ளார்.

இந்ததீர்மானம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் முயற்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் அவசியமற்றது என்பதே இலங்கையின் கருத்து என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் இந்தத் தீர்மானம் சட்ட விரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய தீர்மானத்திற்கு பேரவையின் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் முன்னைய அரசாங்கம் தீர்மானத்திற்கு இணை அனுசரணைை வழங்கியதன் மூலம்  நாட்டிற்கு துரோகமிழைத்தது எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளுர் பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறல் விவகாரத்திற்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post