கமலுக்கு வில்லனாகும் லாரன்ஸ்... - Yarl Voice கமலுக்கு வில்லனாகும் லாரன்ஸ்... - Yarl Voice

கமலுக்கு வில்லனாகும் லாரன்ஸ்...கமல் நடிக்க போகும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார்.

தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய லாரன்ஸ், தான் சிறு வயதில் ரஜினி மீது கொண்ட தீவிர அன்பால் கமல் போஸ்டர் மீது சாணி அடித்ததாக பேசினார். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. கமல் ரசிகர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கமலை நேரில் சந்தித்த லாரன்ஸ், அதற்காக மன்னிப்பு கேட்டதுடன், அது பற்றி கமலிடம் விளக்கமும் அளித்தார். இந்நிலையில் கமலுக்கு வில்லனாக லாரன்ஸ் நடிக்க உள்ளது கமல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் கமலின் 66 வது பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு விக்ரம் படத்தின் ஷூ ட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் கமலின் 66 வது பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் மடிந்த பிறகு விக்ரம் படத்தின் சூட்டிங்கில் கமல் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post