யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ள வேண்டும் - கூட்டமைப்பு, முன்னணி எம்பிக்கள் கோரிக்கை - Yarl Voice யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ள வேண்டும் - கூட்டமைப்பு, முன்னணி எம்பிக்கள் கோரிக்கை - Yarl Voice

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ள வேண்டும் - கூட்டமைப்பு, முன்னணி எம்பிக்கள் கோரிக்கையாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ளவேண்டும் அப்போதுதான் அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பேசுவதற்கான சுமூகமான சூழல் உருவாகும் என்று நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டம் இன்று (05.03.2021) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இணைத்தலைவர்களான கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும், வடமாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் அவர்களினதும் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post