கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த சிறிதரன் - Yarl Voice கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த சிறிதரன் - Yarl Voice

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த சிறிதரன்



கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று  நடைபெற்றது!

இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சில..

• கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் காணிகளை இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது அதை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

• கிளிநொச்சி பொது நூலகத்திற்கான காணியையும் இராணுவம் சுவீகரத்து வைத்திருக்கிறது அதை விடுவிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

•  அக்கராயன் கரும்புத் தோட்டத்தின் காணியை தனிநபர்களுக்கு வழங்க முடியாது எனவும் அது  கூட்டுறவுச் சங்கத்திற்கே வழங்கப்பட வேண்டும்.

•  விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும். காரணம் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இம்முறை அதிக விளைச்சலை பெறமுடியாமல் போயுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டே நெல் கொள்வனவு செய்யப்பட வேண்டும்.

* சட்ட விரோதமான மண் அகழ்வினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* ஐ ரோட் திட்டத்தை மிக வேகமாக துரிதப்படுத்த வேண்டும். பல்லவராயன் கட்டு வன்னேரி வலைப்பாடு வேரவில் கிராஞ்சி ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் கிளிநொச்சி நகருக்கு வருவதில் பாரிய இடையூறுகளை எதிர்கொள்கின்றனர் எனவும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் இந்த திட்ட வீதிகள் இன்னும் ஆரம்பமாகவில்லை.

* காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிளிநொச்சி மன்னார் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களின் அலுவலகம் அனுராதபுரத்திற்கு மாற்ற அனுமதிக்க முடியாது எனவும் மீள அதை யாழ்ப்பாணத்திற்கு அதை கொண்டு வரவேண்டும் எனவும் அல்லாது போனால் இந்த 4 மாவட்டங்களுக்கும் பொதுவாக மாங்குளத்தில் அதன் அலுவலகம் திறக்கப்பட வேண்டும். அநுராதபுரத்திற்கு மாற்றுவதன் நோக்கம் வேறு சில நோக்கங்களை அடைவதற்காக மாத்திரமே எனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் குறிப்பிடப்பட்டது. 


0/Post a Comment/Comments

Previous Post Next Post