ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது - மதுவரி திணைக்களம் அதிரடி நடவடிக்கை - Yarl Voice ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது - மதுவரி திணைக்களம் அதிரடி நடவடிக்கை - Yarl Voice

ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது - மதுவரி திணைக்களம் அதிரடி நடவடிக்கைசுமார் ஒரு கோடி பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மதுவரித் திணைகளத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி  அறிவுறுத்தலில் மதுவரி மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post