மரண குத்து.. படப்பிடிப்பு தளத்தில் இறங்கி குத்திய பிரபல இசையமைப்பாளர் - Yarl Voice மரண குத்து.. படப்பிடிப்பு தளத்தில் இறங்கி குத்திய பிரபல இசையமைப்பாளர் - Yarl Voice

மரண குத்து.. படப்பிடிப்பு தளத்தில் இறங்கி குத்திய பிரபல இசையமைப்பாளர்
பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படப்பிடிப்பு தளத்தில் இறங்கி குத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.ரஞ்சித்தின் அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

இப்படத்தை தொடர்ந்து, சூது கவ்வும், இறுதிச்சுற்று, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், கபாலி, பைரவா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார் சந்தோஷ் நாராயணன்.

அடுத்ததாக தனுஷின் ‘கர்ணன்', ‘ஜகமே தந்திரம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் ரிலீசாவதற்கு முன்பாகவே இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளனர்
அதிலும் குறிப்பாக கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்டா வர சொல்லுங்க பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்து. 

தற்போது கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விக்ரமை வைத்து இயக்கும் சியான் 60 படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பறை இசை கலைஞர்கள் சுற்றி நின்று வாசிக்க, சந்தோஷ் நாராயணன் அவர்களுடன் இணைந்து செம குத்து குத்தியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பிரமித்து போயுள்ளனர். பலரும் மரண குத்து பாஸ் என பாராட்டி வருகின்றனர். இதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் ‘ஆஹா.... பின்றிங்களே ஜி' என கமெண்ட் செய்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் அவரது இந்த குத்தாட்ட வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post