சர்வதேச நீதி கோரி யாழில் மாபெரும் எழுச்சி பேரணி - Yarl Voice சர்வதேச நீதி கோரி யாழில் மாபெரும் எழுச்சி பேரணி - Yarl Voice

சர்வதேச நீதி கோரி யாழில் மாபெரும் எழுச்சி பேரணிஇலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில்  இன்று  மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிி   இடம்பெற்றதுு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நல்லை ஆதீனம் முன்பாக நிறைவடைந்துள்ளது.

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவிலிருந்து பேரணியாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமாகியிருந்தது.

இதையடுத்து, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் தற்போது இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாகச் சென்று பேரணி நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post