நீங்க தான் பிக் பாஸை தொகுத்து வழங்கணும்: சிம்புவுடன் பேச்சுவார்த்தை - Yarl Voice நீங்க தான் பிக் பாஸை தொகுத்து வழங்கணும்: சிம்புவுடன் பேச்சுவார்த்தை - Yarl Voice

நீங்க தான் பிக் பாஸை தொகுத்து வழங்கணும்: சிம்புவுடன் பேச்சுவார்த்தைஇந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து தமிழிலும் அறிமுகம் செய்து வைத்தார்கள். இதுவரை 4 சீசன் முடிந்திருக்கிறது. 4வது சீசன் அண்மையில் தான் முடிந்தது. பிரபல நடிகர் ஆரிக்கு டைட்டில் கிடைத்தது.

முதல் சீசனில் இருந்து உலக நாயகன் கமல் ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். அவர் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் மேடையில் பேசுவதை பார்க்கவே ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. அதிலும் அவர் அரசியலுக்கு வந்த பிறகு பிக் பாஸ் மேடையை அரசியல் மேடையாக்கி கருத்து சொல்வது பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த வாரம் ஆண்டவர் என்ன கருத்து சொல்லப் போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பில் பலரும் நிகழ்ச்சியை பார்ப்பது உண்டு. இந்நிலையில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கான வேலையை துவங்கிவிட்டார்களாம். கமல் ஹாசன் தற்போது அரசியல் களத்தில் மக்கள் பணியாற்றி வருவதால் அவருக்கு பதில் வேறு யாரையாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

இந்நிலையில் அநியாயத்துக்கு ஆளே மாறிப் போயிருக்கும் சிம்புவை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூறி அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கக்கூடும் என்று பேச்சு கிளம்பியிருப்பது இது முதல் முறை அல்ல.

ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு இந்த ஆண்டு கமலுக்கு பதில் வேறு ஒருவர் தொகுத்து வழங்குவார் என்று பேச்சு கிளம்புவது வழக்கமாகிவிட்டது. ஆனால் இம்முறை அப்படி இல்லையாம். சிம்புவை பிக் பாஸ் மேடையில் நிறுத்திப் பார்க்கும் முயற்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பத்து தல, கவுதம் மேனன் படம், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படம் என்று கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் பிக் பாஸுக்கு ஓகே சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post