சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு! - Yarl Voice சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு! - Yarl Voice

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!


சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 65 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமையஇ சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 கோடி 52 இலட்சத்து 87 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்இ கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய கொரோனா தொற்றினால் 25 இலட்சத்து 59 ஆயிரத்து 436 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளைஇ சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்தும் முதல் இடத்தில்  உள்ளது.

அங்கு இதுவரை மொத்தமாக 2 கோடியே 93 இலட்சத்து 70 ஆயிரத்து 705 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post