கொழும்பு டாம் வீதி சடலத்துடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் தற்கொலை - Yarl Voice கொழும்பு டாம் வீதி சடலத்துடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் தற்கொலை - Yarl Voice

கொழும்பு டாம் வீதி சடலத்துடன் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் தற்கொலைகொழும்பு-டாம் வீதியில் பயணப் பெட்டிக்குள் சடலத்தை விட்டுச் சென்ற புத்தல பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர் படல்கும்புர 5ஆம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை டாம் வீதியில் பெண்ணொருவரின் உடலுடன் மீட்கப்பட்ட சூட்கேசை குறிப்பிட்ட பகுதிக்கு கொண்டுவந்தவர் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என  குறிப்பிட்டுள்ளார்.

புத்தல பொலிஸ்நிலையத்தை சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரே பெண்ணின் சடலத்தை  புறக்கோட்டைக்கு கொண்டுவந்துள்ளார் என தெரிவித்துள்ள  பொலிஸ் பேச்சாளர் அவர் பதுல்கும்புர பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்


0/Post a Comment/Comments

Previous Post Next Post