“சண் அங்கிள்” பிரிவு தமிழ் ஊடக பரப்பில் பேரிழப்பு! யாழ் ஊடக அமையம் - Yarl Voice “சண் அங்கிள்” பிரிவு தமிழ் ஊடக பரப்பில் பேரிழப்பு! யாழ் ஊடக அமையம் - Yarl Voice

“சண் அங்கிள்” பிரிவு தமிழ் ஊடக பரப்பில் பேரிழப்பு! யாழ் ஊடக அமையம்
“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண்முகராஜாவின் மறைவிற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

“சண் அங்கிள்” என்று அன்பாய் அனைவராலும் அழைக்கப்படும் மூத்த ஊடகவியலாளர் சண் சண்முகராஜா இன்று செவ்வாய்கிழமை தனது 85 வயதில் அனைவரையும் விட்டு பிரிந்துள்ளார்.

தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபுரிந்த அவரது இழப்பு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்.

 “சண் அங்கிள்”, என சகலருடனும் நெருக்கமாக பழகுமொருவராகவும் அகிம்சை வழிப்போராட்டங்கள் தொடர்பில் போதிய புரிதல் கொண்டவராக தனது அறிக்கையிடல்கள் மூலம் அனைவரது நன்மதிப்பினையும் அவர் பெற்றிருந்தார்.  

அவருடைய எழுத்துக்கள் எவ்விதமான திருத்தங்களுக்கும் உட்படுத்தப்படாமலே அச்சுக்கு செல்லுமெனவும் அந்தளவுக்கு பத்திரிகை ஆசிரியருக்கும் ஆசிரியர் பீடத்துக்கும் மிகவும் விசுவாசமாகவும் நம்பிகையுடனும் திகழ்ந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர்கள் அனைவரும் நினைவுகூர்ந்துள்ளனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய யாழ்.ஊடக அமையம் பிரார்த்திக்கின்றது.
நாளை புதன்கிழமை நல்லூர் அரசடியிலுள்ள வதிவிடத்தில் நடைபெறும் இறுதி அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் பங்கெடுக்கவும் யாழ்.ஊடக அமையம் அழைப்பு விடுக்கின்றது.

தலைவர், செயலாளர்
யாழ்.ஊடக அமையம்

0/Post a Comment/Comments

Previous Post Next Post