ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குரு பூசை - Yarl Voice ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குரு பூசை - Yarl Voice

ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குரு பூசைஈழத்துச் சித்தர் தவத்திரு யோகர் சுவாமிகளின் குரு பூசை - பங்குனி ஆயிலிய தினமான  இன்று  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறையில் மிகவும் பக்தி பூர்வமாக  இடம்பெற்றது.  

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி ஸ்ரீ முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.  சிறிசற்குணராஜா, கலைப் பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், நிதியாளர், வேலைத்தளப் பொறியியலாளர்,  முன்னாள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். 

சிவ யோகர் சுவாமிகளின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து, ஆராதனைகள் இடம் பெற்றன. இன்றைய நாளில் 60 ஆவது அகவை காணும் துணைவேந்தருக்கு  இந்து நாகரிகத் துறையினர் பொன்னாடை போர்த்தி கௌரவமளித்தனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post