இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும்ஆபத்து -சம்பிக்க ரணவக்க - Yarl Voice இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும்ஆபத்து -சம்பிக்க ரணவக்க - Yarl Voice

இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும்ஆபத்து -சம்பிக்க ரணவக்கமனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பிபிளஸ் வரிச்சலுகையை இழக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமொன்று இல்லாததால் இலங்கை அரசாங்கம் சர்வதேச அரங்கில் தோற்கடிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

12000 முன்னாள்விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை விடுதலை செய்தமை போன்ற நடவடிக்கைகள் மூலம்அரசாங்கம்தமிழ் அரசியலைதனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது,

ஜஹ்ரான் ஹாசிம் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாத்உறுப்பினர்களிற்கு அரசாங்கம் சம்;பளம்வழங்கியது முஸ்லீம்அரசியலை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக அரசாங்கம் இதனை செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு டெஸ்மன்ட் பெர்ணான்டோ அறிக்கைபோன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக  அரசாங்கம் உள்நாட்டு வெளிநாட்டு சகாக்களுடன் இணைந்து செயற்பட்டிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post