ராஜபக்ச அரசின் நிகழ்ச்சி நிரலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள் சட்டத்தரணி சுகாஷ் ராஜபக்ச அரசுடன் இணைந்து பதவி பெற்றவரே மணிவண்ணன் தான் என்றும் சாடியுள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றச்சாட்டியிருந்தார்.
முன்னணி தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்
யாழ்ப்பாணத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது க.சுகாஸ் பதில் வழங்கியுள்ளார்.
ராஜபக்ச அரசின் வலதும் மற்றும் ஈபிடிபியின் பி அணியுமாக மணிவண்ணன் தரப்பே செயற்படுகிறது. அதனால் தான் அரசியல் கோமாளித்தனமாக எங்கள் கட்சி மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.
அன்று ஒரு கதையும் இன்று வேறொரு கதையையும் கூறி பதவிக்காக மணிவண்ணன் தரப்பு உளறி வருவதாகவும் சில வீடியோக்களையும் காட்டி சாடியுள்ளார். இவர்களில் வாயு பற்றி எங்களாலும் நிறைய கதைக்க முடியும். ஆகவே இவ்வாறு உளறுவதை அவர்கள் நிறுத்திக் கொள்வது முதலில் நல்லது.
மேலும் நாங்கள் ராஜபக்ச தரப்பிற்கு ஆதரவை வழங்கவில்லை என்பதுடன் அவர்களின் நிகழ்ச்சி நிரலிலும் செயற்படவில்லை என்கிற அதே நேரத்தில் ராஜபக்ச தரப்பின் ஆதரவுடன் மாநகர முல்வரானது மணிவண்ணன் தான்.
அதனால் தான் ராஜபக்ச தரப்பின் வலதும் இடதுமாக அவர் இருக்கின்றார். அதே நேரத்தில் ஈபிடிபி யின் பி அணியாகவும் மணிவண்ணண் தரப்பே செயற்படுகிறது.
இவ்வாறு அரசுடன் இணைந்து பதவியை பெற்றுவிட்டு மற்றவர்களை குற்றஞ்சாட்டுவது வேடிக்கையானது. மேலும் இனத்தின் விடுதலைக்காக நேர்மையாக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற எங்கள் அமைப்பை குற்றஞ்சாட்டுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.
Post a Comment